உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் என்ற பகுதியில் அழகிரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலம் என்ற மனைவியும், 4 மகள்களும், 1 மகனும் உள்ளனர். அழகிரியின் 4 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அழகிரி இறந்துவிட்டதால் கமலம் தன்னுடைய மகனுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக கமலத்திற்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. […]
