புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மசினகுடி பகுதியை சேர்ந்த 2 பேரை புலி கடித்து கொன்றது. அந்த புலியை 23 நாட்கள் போராட்டத்துக்கு பிறகு வனத்துறையினர் பிடித்தனர். இந்நிலையில் மாவனல்லா கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக புலி நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் புலி கால்நடைகளை அடித்து கொன்று வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் […]
