கருவுற்ற மூன்று மாதங்களில் குழந்தை உருவாகும் அழகு : உங்கள் குழந்தை இப்போதும் உங்கள் உள்ளங்கைக்குள் அடங்கும் அளவுக்கு சிறிதாகத்தான் இருக்கிறது. குழந்தையின் தலையில் கூந்தலும், உடல் முழுவதும் மென்மையான ரோமங்களும் வளர்த்துக்கொண்டு இருக்கிறது. அவளுடைய விரல்நுனிகளில் சின்னஞ்சிறு கைரேகைகள் உருவாகிக்கொண்டு இருக்கின்றன. உங்கள் கருப்பையின் உள்ளே, உங்கள் குழந்தை திரவத்தின் மீது பாதுகாப்பாக மிதந்துகொண்டு இருக்கிறது. அந்த திரவம் அவள் எதன் மீதும்மோதிக்கொள்ளாமல் பாதுகாப்பதோடு கதகதப்பாகவும் வைத்துக்கொள்கிறது. குழந்தைகளுக்கு விக்கல் வரக்கூடும். இது உங்கள் கருப்பைக்குள்ளே […]
