3 வது திருமணம் செய்ததோடு மனைவியை மிரட்டிய குற்றத்திற்காக வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைபட்டி புதூர் பகுதியில் சித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்லுக்குழி நாயக்கர் தெருவில் வசிக்கும் நாகராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பின் தஞ்சாவூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் நாகராஜ் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது கணவர் நாகராஜுக்கு […]
