தனியார் நிறுவன ஊழியர்கள் மகளிர் சுய உதவி குழு தலைவியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி மகளிர் சுய உதவி குழு தலைவியாக இருக்கும் சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடன் பெற்று சித்ரா தனது 21 பெண் உறுப்பினர்களுக்கும் பிரித்து அளித்துள்ளார். அதன்பின் தவணைத் தொகை வசூலித்து சித்ரா அந்த நிதி நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளார். […]
