கார் ஓட்டுநர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம் பகுதியில் கார் டிரைவரான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பூர்வீக நிலத்தை போலி ஆவணம் மூலம் உறவினர்கள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அந்த நிலத்தை மீட்டு தருமாறு நாகராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மன உளைச்சலில் இருந்த நாகராஜ் மதுரவாயல் போலீஸ் குடியிருப்பில் இருக்கும் வாக்கி-டாக்கி கோபுரத்தில் ஏறி தற்கொலை […]
