செல்போன் செயலிகளின் நிர்வாகிகள் கடனை செலுத்தவில்லை என கூறி பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வீரியம்பாளையம் பகுதியில் சுவாதி என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சுவாதி கடன் பெறுவதற்காக தனது செல்போனில் 30-க்கும் மேற்பட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து ஆன்லைன் மூலம் 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார். இதனையடுத்து சுவாதி 74 ஆயிரம் ரூபாய் வரை […]
