டெல்டாப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்ததை விசிக வரவேற்கிறது என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் விசிக கட்சியின் மண்டல செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம், “கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை அமைக்க, தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. அதனால் விளைநிலம் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். விஜய் படப்பிடிப்புத்தளத்தில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. ராஜிவ் […]
