வேலைக்கு சென்ற பெண் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் காலனியில் மருதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் விஜயா அதே பகுதியில் வசிக்கும் ராம்தாய் உள்பட 3 பேருடன் அருகாமையில் இருக்கும் ராமசாமி என்பவரின் தோட்டத்தில் கூலி வேலைக்காக சென்றுள்ளனர். அதன்பின் வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது திடீரென கனமழை பெய்த […]
