இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அங்கிநாயகன்பள்ளி பகுதியில் சக்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சக்தி தனது இருசக்கர வாகனத்தில் மனைவி சுமதியை அழைத்துக் கொண்டு வெலகல்நத்தம் மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரின் மீது […]
