திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் 54 அடி உயர புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் சைவ சமயத்தில் தலைமை பீடமாகவும் பெரிய கோவில் என்று அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜசுவாமி ஆலயத்தின் இரண்டாவது பிரகாரத்தில் வன்மீகநாதர் சன்னதி எதிரே இருந்த 98 ஆண்டு பழமை வாய்ந்த கொடிமரம் பழுதடைந்தது. இதனால் கேரள மாநிலத்தில் உள்ள மலைப் பகுதியில் இருந்து 54 அடி உயர தேக்கு மரம் கொண்டுவரப்பட்டு ஆகம விதிப்படி புதிய மரம் உருவாக்கப்பட்டது. […]
