மன்னார்குடி அருகே விவசாயி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை செய்து வரும் காவல் துறையினர், இந்தக் கொலை சொத்து தகராறில் நடந்திருக்காலம் எனக் கூறுகின்றனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்துள்ள பாலையூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விவசாயி குபேந்திரன்(46). இவர் தனது மனைவி வனஜாவை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். மனைவி வனஜா குடும்பத்திற்கும் குபேந்திரனுக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்பாடுகிறது. இந்நிலையில், பக்கத்து தெருவில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு […]
