கார் அரசு பஸ் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேங்கிக்கால் பகுதியை சார்ந்தவர் ஸ்ரீபால். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி பத்மபிரியா. இவர்களுக்கு மிருதுளா, ஆரியா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். சென்னையிலுள்ள மாதவரத்தில் பத்மபிரியாவின் தந்தையான சதீஷ்குமார் லாரி வைத்து தொழில் நடத்தி வந்தார். இவருடைய மனைவி சாந்தி. […]
