குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வருவாய்த்துறையினர் காடுவெட்டி பகுதியில் நடைபெறும் மேம்பால கட்டுமான பணிக்காக அப்பகுதியில் உள்ள சில குடியிருப்புகளை அகற்றுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து அந்த வீடுகளை காலி செய்யும்படி குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய குழந்தைகள், முதியவர்கள் என குடும்பத்துடன் காடுவெட்டி பகுதியில் உள்ள கல்லூரி அருகே சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். […]
