வெங்கட்டா நகர் தமிழ் சங்க கட்டடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் நாராயணசாமி திறந்துவைத்தார். புதுச்சேரி வெங்கட்டா நகர் தமிழ் சங்க கட்டடத்தில் நான்கரை அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இதன் திறப்புவிழாவில் இன்று முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்தார். பின்னர், விழாவில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி,புதுச்சேரி மாநிலம் சார்பாக திருவள்ளுவர் புகழை பரப்புவதற்காகவும் உலகமெங்கிலிருந்தும் புதுச்சேரி வரும் சுற்றுலாப்பயணிகள் திருவள்ளுவர் புகழை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் திருவள்ளுவர் சிலை […]
