மாணவர்களை ஏற்றி செல்லாத அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி ஜவ்வாது மலையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் வசிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் பகுதியில் இருக்கும் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதி வழியாக செல்லும் அரசு பேருந்துகள் மாணவர்களை ஏற்றிச் செல்வது இல்லை. இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் ஆலங்காயம்- […]
