மன உளைச்சலில் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரியான நாகராஜ். இவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலையில் இருக்கும் பள்ளக்கனியூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மலர்விழி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மலர்விழி ஏலகிரி மலையில் இருக்கும் படகுத்துறை பூங்காவில் கூலி வேலை செய்து வந்திருக்கிறார். […]
