பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சிடுவதை விட பொது மக்கள் தினசரி செல்லும் இடங்களில் திருக்குறளை பதிவு செய்ய தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை ஐஐடி மாணவி பாத்திமா பேராசிரியர்கள் அளித்த மன உளைச்சலால் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது போன்ற நிகழ்வு சென்னை ஐஐடி மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும் நடைபெறுகிறது. […]
