பிரபலமான கடைக்குள் சென்று வாலிபர் ஒருவர் கத்தியால் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி சாலையில் பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் அமைந்திருக்கிறது. இந்த நிறுவனத்தில் இரவு நேரத்தில் வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் பொருட்களை தேர்வு செய்து கொண்டிருக்கும் போது வாலிபர் ஒருவர் கையில் கத்தியுடன் கடைக்கு வந்துள்ளார். அதன்பின் வாய்க்கு வந்தபடி கெட்ட வார்த்தைகளைப் பேசி கடை ஊழியரிடம் கத்தியை காட்டியும், வாடிக்கையாளர்களை மிரட்டியும் தகராறில் […]
