பிரபல விஞ்ஞானி ஒருவர் இருந்தார். பல வேலை செய்யக்கூடிய ரோபோக்களை உருவாக்கும் பெரிய திறமைசாலி .அவருடைய வீட்டில் வரவேற்பில் இருந்து சமையல் வரை எல்லாத்துக்கும் ரோபோ தான். இப்படி அவர் பல ரோபோக்கள் செய்திருந்தாலும் அவருடைய மனதில் ஒரு கவலை இருந்தது .வீட்டிற்கு வரவேற்பதில் இருந்து சமையல் வரை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ரோபோ உள்ளது .எல்லா வேலையும் செய்யும் ஒரு ரோபோ கண்டுபிடிக்க அவருக்கு ஆசை .அதற்காக நெடுநாள் உழைத்து ,பொறுமையாக ,கஷ்டப்பட்டு ,கடைசியாக ஒரு ரோபோ உருவாக்கினார். […]
