கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக வேலை பார்க்கும் காவல்துறையினருக்கு நிவாரண பொருட்களை வழங்க முடிவு செய்துள்ளார். அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு கோவில் காவல் நிலையம், போக்குவரத்து காவல் துறையினர், ஊர்க்காவல் படை என மொத்தம் 125 பேருக்கு காய்கறிகள், எண்ணெய், அரிசி, மளிகை போன்ற நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். […]
