அம்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த கும்பலை, அப்பகுதி இளைஞர்கள் துரத்தியதில் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓடினர். சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு இந்திரா நகர் பகுதியில் வசித்து வருகிறார் சத்தியராஜ். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகின்றார். இந்த சூழலில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இவர் குடும்பத்துடன் கடந்த 24ஆம் தேதி சொந்த ஊரான புதுக்கோட்டைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை 2 […]
