அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சமூகப் பாதுகாப்புத் துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பாக தேசிய பெண் குழந்தைகள் தின விழா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா தலைமை தாங்கியுள்ளார். இதில் அனைத்து மகளிர் காவல்துறை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் கீதா ஆகியோர் முன்னிலை […]
