ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய்க்கும் மேல் உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், விலையைக் கட்டுப்படுத்த வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. வெங்காய உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த கடும் மழையால் வெங்காய உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், கடந்த 16ஆம் தேதி […]
