Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஏன் குடிச்சிட்டு வந்த … இரவு முழுவதும் பிணத்துடன் உறங்கிய மகன் …!!

குடிப்பழக்கத்தை கண்டித்த பெரியப்பாவை கட்டையால் அடித்துக் கொலை செய்து இளைஞர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தேனியில் ,சமதர்ம புரத்தைச் சேர்ந்த கனகவேல் ஐயப்பன் என்ற அந்த இளைஞர் நேற்று இரவு  குடிபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அவரது பெரியப்பா பெத்தணசாமி கண்டித்துள்ளார்.இதனால்  ஆத்திரமடைந்த கனகவேல் ஐயப்பன் உருட்டு கட்டையை எடுத்து பெத்தணசாமியின் தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்நிலையில் பெத்தணசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .அவர் உயிரிழந்ததைக்  கூட தெரியாமல் இரவு முழுவதும் அவர்  உடலுக்கு பக்கத்திலேயே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு …!! போக்குவரத்து கடும் பாதிப்பு…

தேனி மாவட்டம் போடி அருகே பாறைகள் உருண்டு தீடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால் மூணார், போடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே நிலச்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததால் போடி,மூணார் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.போடி அருகே புளியுற்று என்ற இடத்தில் காலையில் பாறைகள் உருண்டு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலை முழுவதும் பாறைகள் மற்றும் மண்ணால் மூடப்பட்டுள்ளது. இதை அடுத்து போடி, மூணார் சாலையில் கடுமையாக போக்குவரத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரிமீது மோதியதில் ஒருவர் பலி …!!

தேனி மாவட்டம் அருகே  இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் அதனை ஒட்டி வந்தவர்  எதிரே வந்த லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது .   தேனி அருகே வீரபாண்டியை அடுத்து  உப்பார்பட்டியை  சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனது மனைவி மற்றும் ஒன்பது வயது மகனுடன் இருசக்கர வாகனத்தில் வீரபாண்டி நோக்கி சென்றுள்ளார். அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது குமுளி நோக்கி லாரி ஒன்று வேகமாக வந்து உள்ளது.   […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை” 2 கொடூரர்கள் கைது …!!

ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய இரு வேறு இடங்களில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த இருவருக்கு தேனி மகிளா நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள மணியகரான்பட்டியைச் சேர்ந்தவர் உதயகுமார் (34). இவர் 2017ஆம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். இதுகுறித்து ஆண்டிபட்டி மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து உதயகுமாரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேலைக்கு போக சொன்ன மனைவி….. உலகத்தை விட்டே சென்ற கணவர் …!!

வேலைக்குச் செல்லாமல் கணவர் குடிப்பழகத்திற்கு அடிமையாகி இருப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தேனி மாவட்டம் போடி பெரியாண்டவர் கோயில் தெருவில் வசித்துவந்தவர் பாண்டியராஜன்(42). இவருக்கு திருமணமாகி பாக்கியலட்சுமி என்ற மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். பிழைப்பிற்காக பாண்டியராஜன் டிராக்டரை வாடகைக்கு எடுத்து ஓட்டிவந்துள்ளார். பாண்டியராஜன் வேலைக்குச் செல்லாமல் குடிப்பழகத்திற்கு அடிமையாக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறுது. இதனால் பாண்டியராஜனுக்கும் பாக்கியலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் பாண்டியராஜனின் தாயார் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

OPS வீட்டருகே….. ”திருவள்ளுவர் சிலை அவமதிப்பு” தொடரும் பரபரப்பு …!!

தஞ்சை பிள்ளையார்பட்டியைத் தொடர்ந்து பெரியகுளத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் அவமரியாதை செய்ததைத் தொடர்ந்து பாஜகவினர் பாலபிஷேகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை கடந்த சில தினங்களுக்கு முன் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கருப்பு மை பூசியும், சாணம் வீசியும் அவமரியாதை செய்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து தஞ்சையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனியில் ஆழ்துளைக் கிணறுகளை, மழைநீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்றும் திட்டம்!

விவசாயிகள், பொதுமக்களுக்கு அரசு நிதி உதவியுடன், பாதுகாப்பான முறையில் கூடிய மழைநீர் சேமிப்பு கிணறுகளாக மாற்றம் செய்வது குறித்த செயல்முறை விளக்கத்தை தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் சுஜித் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை கண்டறிந்து மூடுவதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது. இதன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை பயன்படுமாறு மூடினால் ரூ22,000 பரிசு……. மாவட்ட ஆட்சியர் அதிரடி சலுகை….!!

பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதற்கு 22,000 ரூபாய் வழங்கப்படும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் பள்ளவி பல்தேவ் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பது குறித்து செயல்முறை விளக்கம் மாவட்ட ஆட்சியர் பள்ளவி பல்தேவ் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், ஆழ்துளை கிணற்றில் மழை நீர் தொட்டி அமைக்க 22 ஆயிரம் ரூபாயும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தடை நீக்கம்” சுருளி அருவியில் ஆனந்த குளியல்…….தேனியில் குவியும் கூட்டம்….!!

தேனி மாவட்டம் சுருளி அருவியில் நான்கு நாட்களுக்கு பிறகு தடை நீக்கப்பட்டு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  தேனி மாவட்டத்தில் சுருளி அருவியில் குளிக்க  விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மிகவும் பிரபலமான சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக  சுருளி அருவி விளங்குவதால் அங்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

2 மகன்கள் இருந்தும் கவனிக்க ஆளில்லை….. வேதனை அடைந்த தாய் ஆற்றில் குத்தித்து தற்கொலை….!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இரண்டு மகன்கள் இருந்தும் கவனிக்க ஆளில்லை என்று கூறி வைகை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 55 வயது பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். தேனி மாவட்டம் ஜம்புலிபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மரகதம். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் மகன்கள் இரண்டு பேரும் வெளியூரில் உள்ளனர். வாழ்வாதாரத்தை காக்க வீட்டு வேலை செய்துவரும் மரகதம் வயதான நிலையில் இரண்டு  மகன்கள் இருந்தும் தன்னை கவனிக்க ஆளில்லை என்று கூறி வைகை ஆற்றில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“சரசரவென நிரம்பிய அணை “2,865 ஏக்கர் நிலம்….. 121 நாள்…. பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 30 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. தேனீ மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள சோத்துப்பாறை அணையின் மூலம் பெரியகுளம் மேல்மங்கலம் லட்சுமிபுரம் தாமரைகுளம் பகுதியில் மொத்தம் 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சுமார் 126.28 அடி கொண்ட அணை முழு கொள்ளளவை எட்டி தற்போது நீர்மட்டம் 126 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 500 கனஅடியாக உள்ளது. இந்நிலையில் முதல் போக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போச்சு…. போச்சு…. ”22,00,000 கிலோ நாசம்” …. மசாலா கம்பெனியே போச்சு …!!

தேனி கோடாங்கிபட்டி தனியார் மசாலா நிறுவனத்தில் இரண்டவது நாளாக எறிந்து வரும் தீயை கட்டுப்படுத்த வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் கோடாங்கி பட்டியல்  இருக்கக்கூடிய ஈஸ்டர்ன்  மசாலா நிறுவனத்தில் இருந்து பல பகுதிகளுக்கு மசாலா கொடுக்கப்படுகின்றது. இந்த நிறுவனத்தில் 400_க்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று  காலை வழக்கம் போல பணி தொடங்கிய போது 8 மணியளவில் தீடிரென தீ பற்றி எறிய ஆரம்பித்தது. இதையடுத்து அங்கிருந்த எச்சரிக்கை அலாரம் அடித்ததை தொடர்ந்து அனைத்து பணியாளர்களும் வெளியே ஓடினர்.இதை தொடர்ந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உயிர் தப்பிய 400 பேர் ……. தேனி மசாலா கம்பெனியில் தீ விபத்து ……!!

தேனி மாவட்டத்தில் பிரபல தனியார் மசாலா நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்ட்டுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கி பட்டியல்  இருக்கக்கூடிய ஈஸ்டர்ன்  மசாலா நிறுவனத்தில் இருந்து பல பகுதிகளுக்கு மசாலா கொடுக்கப்படுகின்றது. இந்த நிறுவனத்தில் 400_க்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல பணி தொடங்கிய போது தீடிரென தீ பற்றி எறிந்து விபத்துக்குள்ளாது. இதையடுத்து அங்கிருந்த எச்சரிக்கை அலாரம் அடித்ததை தொடர்ந்து அனைத்து பணியாளர்களும் வெளியே ஓடினர். இதை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“காதல் விவகாரம்” சொந்த மகளை கொல்ல முயன்ற பெற்றோர்கள் கைது….!!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மகளை கொலை செய்ய முயன்றதாக பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ராமையா கவிதா தம்பதியின் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து விட்ட நிலையில் இரண்டாவது மகள் போடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தனது அக்காள் கணவரின் தம்பியை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாணவி தனது காதலனுடன் செல்போனுடன் பேசியதாக அவர் தங்கியிருந்த விடுதி வார்டன் மாணவியின் பெற்றோருக்கு தகவல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உங்க ATM கார்டை தாங்க…. நான் எடுத்து தர்ரேன்… முதியவரை ஏமாற்றிய கல்லூரி மாணவன் கைது.!!

தேனி அருகே ஏடிஎம்-ல் பணம் எடுத்து தருவதாக கூறி விவசாயை ஏமாற்றிய கல்லுரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.     தேனி மாவட்டம் போடி அருகே உள்ள  விசுவாசபுரம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்ற விவசாயி அங்குள்ள  ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார் ஆனால் அவர் ஏடிஎம் பயன்படுத்துவது தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.அந்த நேரத்தில்  அந்த ஏடிஎம்க்கு  கல்லூரி வாலிபர் ராஜ்குமார் என்பவர் வந்துள்ளார். கல்லுரி மாணவர் நான் உங்களுக்கு விவசாயிக்கு உதவி செய்வதாக கூறி அவரிடம் இருந்து […]

Categories
பல்சுவை வானிலை

3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்.!!

நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் சென்னை உட்பட சில மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாகவே ஒரு சில இடங்களில்  அடிக்கடி விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது. எனினும் மாலை நேரங்களில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் அடையாறு, கோயம்பேடு, அண்ணாசாலை, தண்டையார்பேட்டை, வண்டலூர், திருநின்றவூர் உட்பட பல பகுதியில் மழை பெய்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

சாலை விபத்தில் கேமரா மேன் சிவா உயிரிழப்பு… கருப்பன் பட நடிகருக்கு காயம்..!!

தேனி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் கேமரா மேன் சிவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் அருகே இருக்கும் கோம்பையில் தனியார் தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப் படப்பிடிப்பிற்கு வந்தவர்கள் அனைவரும் கோம்பை ரெங்கநாதர் கோவில் சாலை வழியாக வாகனத்தில் திரும்பி சென்றனர். அப்போது அவர்கள் சென்ற வாகனம் திடீரென நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த ஸ்டில் கேமரா மேன் சிவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தவறான புரிதல்” அவசர கொலையால் ஆயுள்தண்டனை..!!

தேனியில் மனைவியுடன் தவறான உறவு வைத்திருந்ததாக எண்ணி கூலித்தொழிலாளியை கொலை செய்த கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தேனி மாவட்டம் குன்னூரை சேர்ந்த பால்பாண்டி என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவரை கடந்த 2013ம் ஆண்டு தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். பின் காவல்நிலையத்தில் கொலை குற்றத்திற்காக சரணடைந்த  அவரை காவல்துறையினர் விசாரித்தனர். விசாரணையில் தனது மனைவியுடன் தவறான தொடர்பு உள்ளதாக எண்ணி இந்த கொலையை செய்ததாக கூறப்படுகிறது.பின் […]

Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

5 ஆண்டுகளில் ஒருங்கிணைந்த கல்வி மாவட்டமாக தேனி மாறும்… துணைமுதல்வர் OPS நம்பிக்கை..!!

இன்னும் 5 ஆண்டுகளில் ஒருங்கிணைந்த மற்றும் கல்வியில் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக தேனி உருவாகும் என்று துணைமுதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பழனிசெட்டி பகுதியில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக நடைபெற்ற பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் முறை நிதி உள்ளிட்டவற்றை வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பெண்களுக்கு நிதிகளை வழங்கினார். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனீ அரசு சட்டக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்த OPS…!!!

தேனீ மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். தேனி மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இந்த கல்வி ஆண்டில் சட்ட கல்லூரி தொடங்க தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் வீரபாண்டியை அடுத்துள்ள சந்திரகுப்த மவுரியர் பள்ளியில் தற்காலிகமாக சட்டக் கல்லூரி வகுப்புகள் நடந்து வருகிறது. நிரந்தரமான சட்ட கல்லூரி கட்டிடம் அமைக்கப்பட்ட பிறகு மாற்றம் செய்யப்படும் என […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தக்காளி விலை கடும் சரிவு ..!!விவசாயிகள் கவலை ..!!!

தேனி மாவட்டத்தில் தக்காளி விலை கடுமையாக  சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனர் . தேனி மற்றும் தேவதானப்பட்டி, தாமரைக்குளம், மேல்மங்கலம், முதலக்கம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் தக்காளி பெரிதும் பயிரிடப்படுகிறது .போதிய மழை இல்லாததால் தக்காளி விளைச்சல்  குறைந்துள்ள நிலையில் ,ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிகத்தின் பல பகுதிகளுக்கு தக்காளி கொண்டு வரப்படுகிறது . இதனால் இப்பகுதியில் விளையும் தக்காளிகளுக்கு சரியான விலை கிடைப்பதில்லை என்று விவசாயிகள்  வருத்தமடைந்துள்ளனர் .கடந்த மாதம்  15 கிலோ […]

Categories
அரசியல் தேனி மாநில செய்திகள்

கலைஞரோ..ஜெயலலிதாவோ.. முதல்வராக இருந்திருந்தால் நீட் வந்திருக்காது…. ஸ்டாலின் அசத்தல் பேச்சு..!!

ஜெயலலிதாவோ கருணாநிதியோ முதலமைச்சராக இருந்திருந்தால் நீட் தேர்வு தமிழகத்தில் வந்திருக்காது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கலைஞர் திடலில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அண்மையில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர். நிகழிச்சிக்கு பின் பொது கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தங்க தமிழ்ச்செல்வனை ஏற்கனவே தங்கள் பக்கம் இழுப்பதற்கு பலமுறை […]

Categories
மாநில செய்திகள்

” 4 மாவட்டங்களில் NIA சோதனை ” பரபரப்பில் தமிழகம் ….!!

நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் அன்சருல்லா அமைப்பைச்சேர்ந்த 14 பேர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் . இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணையும் , அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். நெல்லை மேலப்பாளையத்தில் வசித்து வரும் முகம்மது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வறட்சியில்லா மாவட்டமாகும் தேனீ…50,000 மரக்கன்றுகள்…மாவட்ட ஆட்சியரின் அசத்தல் திட்டம்…!!

தேனி மாவட்டம் போடி அருகே மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் முதல் கட்டமாக 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தேனியை வறட்சி இல்லாத மாவட்டமாக மாற்றும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் மரங்களை நட வேண்டுமெனவும் ,திட்டத்தை மாவட்டம் முழுமைக்கும் பேரூராட்சி வாரியாக செயல்படுத்த வேண்டுமெனவும் திட்டமிட்ட அவர் , பேரூராட்சி செயல் அலுவலக அதிகாரிகளுக்கு திட்டத்தை செயல்படுத்தக் கோரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு பேரூராட்சியிலும் தலா ஆயிரம் மரக்கன்றுகள் நட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

25 கோடி மதிப்பிலான “தானியங்கி மின்தடை மையம்” திறந்து வைத்தார் OPS …!!

தேனியில் 25 கோடி மதிப்பிலான  தானியங்கி மின்தடையை நீக்கும் மையத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். சமீப காலமாக மின்தடை என்பது பெரும் பிரச்சனையாக இருந்து வருகின்றது. தமிழகம் முழுவதும் தொடர் மின்வெட்ட்டால் மக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். பல கிராமங்களில் ஒரு நாளைக்கு 5 முறைக்கு மேல் மின்வெட்டு ஏற்படுகின்றது. அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் மின்தடையை நீக்கும் தானியங்கி மையத்தை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்துவைத்தார். சுமார் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“கணவனை கொன்று நாடகமாடிய மனைவி “தேனியில் பரபரப்பு..!!

மொய் பணத்தை செலவு செய்ததால் மனைவி கணவனை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தேனி மாவட்டம் கொத்தப்பட்டி கிராமத்தின் மயானப் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அய்யனார் உடலில் காயங்களுடன் சடலமாக கடந்த மார்ச் 12 ஆம் தேதி மீட்கப்பட்டார் . இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது அதில் , திருமணத்தில் வந்த மொய் பணத்தை வீணாக செலவு செய்ததால் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் “இடியுடன் கூடிய கனமழை” வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகம். இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, விருதுநகர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் நேரத்தில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வைகை அணையில் படகு சவாரி…சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…!!!

ஆண்டிபட்டி அருகில் உள்ள  வைகை அணையில் படகு சவாரி அறிமுகப்படுத்தப்பட்டு  பயணிகள் சவாரி செய்து வருகின்றனர். தேனி மாவட்டம் வைகை அணைக்கு கோடை விடுமுறை காரணமாக திண்டுக்கல் ,மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து  மகிழ்ந்து செல்கின்றனர்.இந்நிலையில்  சுற்றுலாப் பயணிகள் மகிழும் வண்ணம் அங்கு படகு சவாரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில்  சிறுவர் முதல் பெரியவர்கள் வரை படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.படகு சவாரியின்  கட்டணத்தை குறைக்க வேண்டும்  என்ற கோரிக்கையே சுற்றுலா […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை….. வானிலை ஆய்வு மையம் தகவல்……!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோத்தகிரியில் 4 செண்டி மீட்டர் மழை பெய்தது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு இன்று வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அனல் காற்றும்  வீசுவதால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ஆனால் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால்  பொதுமக்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளார்கள். இருந்தாலும் கோடை மழையை தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வறட்சியின் காரணமாக விலை உயர்ந்த காய்கறிகள்….மக்கள் அவதி !!!

தேனி சந்தையில் ,வறட்சியின் காரணமாக,காய்கறிகள் விலை பெரிதும்  உயர்ந்துள்ளது. வறட்சியின் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக காய்கறி சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளதால்  காய்கறி விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. பெரும்பாலான காய்கறிகள் விலை பெரிதும்  உயர்ந்துள்ளது.தேனி உழவர் சந்தையில் , நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.36-க்கும்  அவரைக்காய் ரூ.74-க்கும்  விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.24 , பட்டர் பீன்ஸ் ரூ.135 , கத்தரிக்காய் ரூ.22,   புடலங்காய் ரூ.30 ,  பாகற்காய் ரூ.38 , […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கண் கவரும் மேகமலை!!!

தேனி மாவட்டத்திலுள்ள மேகமலை, தன் பசுமை கொஞ்சும் அழகால் ,சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து  வருகிறது.  மலை என்றாலே அழகுதான்.அதுவும் மரங்கள்,செடிகளால் பசுமை போர்த்தி காணப்பட்டால் சொல்லவே வேண்டாம்.  தேனி மாவட்டத்தில் சின்னமனூரில் உள்ளது மேகமலை. இது திரும்பும் இடமெல்லாம் பசுமை  போர்த்தி அழகாய் உள்ளது .இது  34 கிலோ மீட்டர் தூரத்துக்கு 18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது . இங்குள்ள இறைச்சல் பாறை அருவி மிகவும் அற்புதமாக உள்ளது .மேலும் மேகமலையைச் சுற்றி ஐந்து அணைகள் உள்ளன .வட்டப்பாறை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி பெற்றுள்ள பள்ளிகளுக்கு நோட்டீஸ் !!!

தேனி மாவட்டம்  முதன்மை கல்வி அலுவலர், அரசு பொதுத்தேர்வில் 90 சதவீதத்திற்கும் குறைவான  தேர்ச்சி விகிதம்  பெற்றுள்ள  பள்ளிகளுக்கு  நோட்டீஸ் அனுப்ப  உத்தரவிட்டுள்ளார். இந்தாண்டு,  பிளஸ் 2 தேர்வில், 92.54 சதவீதம் பெற்று 15வது இடத்திலும்,  பத்தாம் வகுப்பில் 93.5 சதவீத தேர்ச்சி பெற்று  25 வது இடத்திலும் தேனி மாவட்டம் உள்ளது . தேர்ச்சி சதவீதம்         குறைந்தற்க்கு காரணம் கண்டறிய அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூட்டம் அல்லிநகரத்தில் நடந்தது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பலத்தக் காற்றினால் தேனியில் மின்தடை -பொதுமக்கள் அவதி .!!!

கடுமையான வெயில் மற்றும் பலத்த காற்றின் விளைவால் நீண்ட நேரம்  மின்சாரமின்றி  தேனி மக்கள் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளனர். கோடைகால ஆரம்பநிலையிலேயே தேனியில் பலத்த காற்றும் கடுமையான வெயிலும் மக்களை பாதிப்புக்குள்ளாக்கியது.    காலையிலிருந்து  காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால்  சாலையில் இருந்த மணலும்  காற்றோடு கலந்து  , இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்களின் கண்களில்  விழுந்ததால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினார்கள். பலத்த காற்று வீசியதால் தேனியில் உள்ள  கடைகளில் இருந்த  பெயர் பலகைகள் அனைத்தும் தூக்கிவீசப்பட்டது .இதனால்  காலையில் இருந்தே அப்பகுதியில்  மின்தடை ஏற்பட்டது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பலத்த காற்றால் வாழைகள் நாசம்…பல லட்சம் இழப்பு… விவசாயிகள் வேதனை…!!

பெரியகுளம் பகுதியில் பலத்த காற்றால்  வாழைகள் சாய்ந்து பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைத்துள்ளனர்.  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் சந்திராபுரம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழைகள் சாய்ந்து சேதமானது.இதையடுத்து காற்றில் சாய்ந்து நாசமான வாழைகளை தோட்ட கலையாளர்கள் மற்றும்  வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டு சென்றனர். அப்போது அதிகாரிகளிடம்  வங்கியில் கடன் வாங்கி  சாகுபடி செய்யப்பட்ட வாழைகள் அனைத்தும் நாசமானதால் அரசு சார்பில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

டாஸ்மாக்  கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்…!!

உப்புக்கோட்டையில் டாஸ்மாக்  கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் உப்புக்கோட்டை அருகில் உள்ள டொம்புச்சேரி கிராமத்தில்  5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்தப்பகுதி பஸ் நிறுத்தத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இந்த கடை முறையான அனுமதி இல்லாமல் திறக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த டாஸ்மாக் கடையை திறக்க இருப்பதாக தகவல் பரவியது.இதற்க்கு […]

Categories
அரசியல் தேனி மாநில செய்திகள்

“போபால் விஷவாயு கசிவு” யார் நியாயம் வழங்குவது….பிரதமர் மோடி கேள்வி..!!

போபால் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு யார் நியாயம் வழங்குவது என்று பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியும் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் பிரதானமாக மோத இருக்கும் இந்த தேர்தல் களத்தில் அமமுக , மக்கள் நீதி மைய்யம் மற்றும் நாம் தமிழர் […]

Categories

Tech |