சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அனுமதியின்றி வருபவர்களை தடுக்க தேனி மாவட்டத்தில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேனியில் கடந்த மாதம் 43 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் புதிதாக 6 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை உட்பட இதர மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சொந்த ஊரான தேனிக்கு திரும்பி வருகின்றனர். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உயரும் அபாயம் எழுந்துள்ளது. எனவே […]
