தலைமை ஆசிரியரின் வீட்டிலும், தனியார் நிறுவன ஊழியரின் வீட்டிலும் ஒரே நாளில கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராவார். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் மனோகரன் அவரது குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு இரவில் புறப்பட்டு சென்றுள்ளார். அதன்பின் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவ்வீட்டில் திருடுவதற்காக திட்டமிட்டனர். இதனையடுத்து மனோகரன் வீட்டின் […]
