டாக்டர் தம்பதியினர் வீட்டில் திருடிய பணிப்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் பைபாஸ் ரோடு பகுதியில் ஷேக் இக்பால்-வனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் டாக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களது குழந்தைகளையும் வீட்டையும் பராமரிப்பதற்காக ஜெயமேரி என்ற பெண்ணை வீட்டு வேலைக்கு வைத்திருந்தனர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக அவர் வீட்டில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனிதா தனது அறையில் வைத்திருந்த 4 பவுன் […]
