ஓடும் பேருந்தில் 14 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 2 பெண்கள் பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ஜோதி. இவருக்கு அருணாதேவி என்ற மனைவி உள்ளார். இவர் அரசு பேருந்தில் சேலத்திலிருந்து கடலூரில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது வழியில் இரண்டு பெண்கள் பேருந்தில் ஏறி அருணா தேவியின் இருக்கை அருகாமையில் அமர்ந்துள்ளனர். அப்போது கையில் இருந்த சில்லரையை […]
