மயக்க மருந்து கலந்து கொடுத்து மூதாட்டியிடம் இருந்து தங்க நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் கனகவள்ளி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி கடந்த 7-ஆம் தேதி வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். மேலும் மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையையும் யாரோ கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதனடிப்படையில் அதே பகுதியில் […]
