டாஸ்மாக் கடையில் துளையிட்டு கொள்ளை அடிக்க முயற்சி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் டாஸ்மாக் மதுபான கடை உள்ளிட்ட அனைத்து கடைகளையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வல்லாரை கிராமத்தில் இருக்கும் டாஸ்மாக் கடை முழு ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த டாஸ்மாக் கடையில் காவலாளியாக பணிபுரியும் பன்னீர்செல்வம் நள்ளிரவு நேரத்தில் கடையிலிருந்து சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உடனடியாக பின்புறம் […]
