ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் அருப்புக்கோட்டை சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஏ.டி.எம் மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் எந்திரத்தை உடைக்க முயன்றனர். அப்போது திடீரென எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]
