குடும்பத்தினர் வெளிஊருக்கு சென்றிருக்கும் நேரத்தில் மர்மநபர்கள் பீரோவில் இருந்த 24,000 ரூபாய் பணத்தை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ராமநத்தம் பகுதி சர்ச் தெருவில் நாராயணன்- முத்துலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் நாராயணன் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார் . இதனால் முத்துலட்சுமி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துலட்சுமி தனது கணவரின் சொந்த ஊரான வடபாதிக்கு 2 குழந்தைகளுடன் சென்றுள்ளார். இதனையடுத்து முத்துலட்சுமி வெளியூருக்கு செல்வதை நோட்டமிட்ட மர்ம […]
