பணமதிப்பு நீக்கம், தவறான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, வங்கித்துறையை முடக்கிவைத்துள்ள காரணங்களாலேயே நாட்டின் பொருளாதாரம் இத்தகைய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அன்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை, நாட்டின் பொருளாதாரம் குறித்து டெல்லியில் உள்ள ஸ்ரீராம் கல்லூரியில் உரையாற்றினார். இந்த உரையில், நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு 3 முக்கிய காரணங்களை முன் வைத்தார். அபத்தமான முடிவான பணமதிப்பு நீக்கம், தவறான வழியில் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி, […]
