சத்தியமங்கலம் பவானி ஆற்றுப்பாலத்திலிருந்து நீரில் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பவானி ஆற்றுப்பாலத்திலிருந்து நேற்று மாலை 4 மணியளவில் ஒரு நபர் ஆற்றில் குதித்துள்ளார். இதனைக்கண்ட பொதுமக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர், பவானி ஆற்றில் இறங்கி 50 மீட்டர் தொலைவில், ஆற்றில் மிதந்துகிடந்த நபரை சிறு காயங்களுடன் மீட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு […]
