இறுதி சடங்குக்கு சென்ற கவுன்சிலரை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பரணம் என்னும் கிராமத்தில் அ.தி.மு.க. கவுன்சிலரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. பிரமுகருக்குமிடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் ஒரு இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். அங்கு மணிகண்டனின் கார் ஓட்டுநரான குலோத்துங்கன் ஒரு மரத்தினடியில் அமர்ந்திருந்த போது கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவரின் உறவினரான […]
