ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள சூளைமேடு பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் 87 லட்சம் ரூபாய் பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் பறிகொடுத்து விட்டதாக எழுதியுள்ளார். மேலும் அதில் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சைபர் க்ரைம் காவல்துறையினருக்கு விக்னேஷின் இழப்பு குறித்து உரிய நடவடிக்கை […]
