தி ஜங்கிள் புக் திரைப்படமானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. ஓநாய் கூட்டத்தில் மனித குழந்தை வளர்வதை மையமாக கொண்டு இந்த படத்தை எடுத்து இருப்பார்கள். இது படமாக இருந்தாலும் நிஜக் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாகும். அதாவது 1969 ஆம் ஆண்டு இந்தியாவில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள காட்டில் நான்கு வேட்டைக்காரர்கள் வேட்டையாடுவதற்காக சென்றுள்ளனர். அந்த இடத்தில் 7 வயது சிறுவன் நரிகள் கூட்டத்தோடு விளையாடிக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்துள்ளான். […]
