நடிகர் ரஜினியின் கையால் வளைகாப்பு வளையல் பெற்றதன் மூலம் பிறவிப் பயனை அடைந்து விட்டதாக அவரது ரசிகை உணர்ச்சி பொங்க தெரிவித்திருக்கிறார். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ராகவா விக்னேஷ் ஒளிப்பதிவாளரான இவரும் இவரது மனைவி ஜெகதீஸ்வரியும் ரஜினியின் தீவிர ரசிகர்கள். நிறைமாத கர்ப்பிணியான ஜெகதீஸ்வரி ரஜினியின் கையால் வளைகாப்பு வளையல் அணிய வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இருந்து வந்திருக்கிறது. மனைவியின் ஆசையை நிறைவேற்ற பல மாதங்கள் முயன்ற ராகவா விக்னேஷ் இறுதியில் தமது நண்பர் […]
