சூட்கேஸில் வைத்து இரண்டு நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்றை கால்வாயில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கிராமத்தில் ஓடை கால்வாய் அருகாமையில் மூடப்பட்ட சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. இந்நிலையில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸை அவ்வழியாக சென்றவர்கள் திறந்து பார்த்ததில் இரண்டு நாட்களே ஆன ஆண் குழந்தை உயிருடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் கூடுதலாக நைட்டி, டவல் போன்றவைகள் இருந்துள்ளது. இது பற்றி கிராம நிர்வாக அலுவலர் […]
