வெள்ளத்தில் சிக்கிய 2 பேரை இளைஞர்கள் மீட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் ஏரி முழுவதுமாக நிரம்பி உபரிநீர் அதிக அளவில் வெளியேறி வருகின்றது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் லட்சுமி என்ற மூதாட்டியும் அவரின் 6 வயது பேத்தியும் சாலையை கடந்த போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது அருகில் இருந்த இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு வெள்ளத்தில் இறங்கி மூதாட்டி மற்றும் அவரின் பேத்தியையும் பத்திரமாக மீட்டுள்ளனர். இதனை போல் நரசிங்கபுரத்திலிருந்து பால் ஏற்றி கொன்று […]
