விவசாய நிலத்தில் குப்பைகளை எரித்துக்கொண்டிருக்கும் போது சேலையில் பிடித்த தீயினால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்மநாயக்கம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னச்சாமி. இவருடைய மனைவியான சின்னதாய் என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை சேகரித்து அதில் தீயை பற்ற வைத்துள்ளார். அந்த சமயத்தில் வேகமாக வீசிய காற்றினால் எதிர்பாராதவிதமாக சின்னத்தாயின் சேலையில் தீப்பற்றியுள்ளது. இதை அவர் கவனிக்காமல் வேலையில் மும்முரம் காட்டியுள்ளார். பிறகு மளமளவென தீ […]
