கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தந்தையுடன் பட்டதாரி பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய பட்டதாரி பெண் அவரது தந்தையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது ஆய்வுக்காக வெளியே சென்ற கலெக்டர் ஸ்ரீதர் காரில் உள்ளே வந்து கொண்டிருக்கும் போது அவருக்கு முன்னால் சென்று அந்தப் பெண்ணும் அவரது தந்தையும் திடீரென கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை […]
