தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவில் ராஜகோபுரத்தில் புனிதநீர் ஊற்றும் சமயத்தில் சரியாக கருடன் கோபுரத்தை சுற்றி வட்டம் அடித்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று தஞ்சை இராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவிலில் குடமுழுக்கு விழாவானது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சிவபெருமானை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் குடமுழுக்கு சிறப்பம்சமாக கோபுரங்களில் உள்ள கலசத்தில் புனிதநீர் ஊற்றப்படும். அந்தவகையில், சரியாக ராஜகோபுரத்தின் கலசத்தில் […]
