குளத்தில் குளிக்க சென்ற தொழிலாளியை முதலை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பனங்காடு கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டின் அருகாமையில் இருக்கும் குட்டையில் வேல்முருகனின் தம்பியான ராஜீவ்காந்தி இரவு நேரத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் தண்ணீருக்குள் இறங்கிய போது அங்கு முதலை வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து குளத்திலிருந்து வெளியே வர முயற்சி செய்த போது முதலை ராஜீவ்காந்தியைப் பிடித்து கடித்துக் குதறி உள்ளது. இதில் பலத்த […]
