கலெக்டர் அலுவலகத்திற்கு தன்னார்வலர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தமிழ்நாடு வருவாய் துறை சார்பாக ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான முகாம் பாரத் நிகேதன் கல்லூரி வளாகத்தில் வருகின்ற 22-ஆம் தேதி தொடங்கி 12 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பயிற்சி பெறும் தன்னார்வலர்கள் 12 நாட்களும் முகாமில் தங்கி பயிற்சி பெற வேண்டும். இதனை அடுத்து பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் […]
