இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழ் உறவுகள் எல்லாருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். சி.எஸ்.கே அணியில் சேர்ந்ததில் இருந்து அடிக்கடி தமிழில் ட்விட் செய்து வருவதால் இவருக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் இடையே நெருங்கிய உறவு ஏற்பட்டது. ஐபிஎல்லில் சிஎஸ்கேவின் ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் ட்விட்டரில் தமிழில் வசனங்கள் பதிவிட்டு ரசிகர்களுடன் நெருக்கமாகி வருகிறார். […]
