Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வயலில் மேய்ந்ததற்கு இப்படியா….? வாயில்லா ஜீவனுக்கு நடந்த கொடுமை…. நடவடிக்கை எடுக்காத காவல்துறை….!!

வயலில் மேய்ந்து காளை மாட்டின் காலை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சார்ந்த ஆனந்த் மாட்டுவண்டி வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் காளை மாடு வீட்டின் அருகில் உள்ள மந்திரியின் வயலில் உள்ள பயிர்களை மேய்ந்துள்ளது. இதனை அறிந்த வயல் உரிமையாளரின் உறவினரான காமராஜ் என்பவர் இரக்கமின்றி மாட்டின் காலை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் கால் முறிந்த நிலையில் மாடு வயலில் சாய்ந்து கிடந்தது. இதனை அறிந்த மாட்டின் உரிமையாளர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

புயல், மழை… இப்போ எலி தொல்லை…. 1000 ஏக்கரை நாசமாக்கிட்டு… இழப்பீடு வேண்டி விவசாயிகள்…!!

புயல்,மழை பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை கணக்கீடு செய்யும் அதிகாரிகள் எலிகளால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களையும் கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் பாசன வசதிக்காக குறிப்பிடப்பட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முப்போகம் சாகுபடி நடைபெறும் நிலையில் தற்போது புயல் மழை காரணங்களால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் மழையால் சாய்ந்து அழுகிய நிலையில் உள்ளது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் ஆடு திருட்டு…. விரட்டி பிடித்த மக்கள்… 4 பேர் கைது…!!

திருவையாறு அருகில் ஆடு திருடிய 4 பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர் .  தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு அருகில் பனவெளி மாரியம்மன்கோவில் தெருவை சார்ந்தவர் மணிராசு மகன் மணிகண்டன் (வயது24). இவர் தன்னுடைய வீட்டில் ஆடு வளர்த்து வருகின்றார். சம்பவம் நடந்த அன்று இருசக்கரவாகனத்தில் வந்த சிலர் ஆட்டை திருடி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் ஆடு திருடியவர்களை விரட்டி சென்றுள்ளனர். இதில் ஒருவர் மட்டும் தப்பிய நிலையில் மற்ற […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடராஜர் கோயில் கலசத்தை காணோம்…? வைரலான வதந்திக்கு நிர்வாகம் முற்றுப்புள்ளி…!!

தஞ்சாவூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். அந்தக் கோவில் மிகப் பிரபலமடைந்ததற்கான முக்கியகாரணம் கோவில்களில் அவ்வபோது மர்மமான, பிரமிக்க வைக்க கூடிய சில சம்பவங்கள் நடக்கும். முற்றிலும் மர்ம முடிச்சுக்களை அதிகம் கொண்டிருக்கும் கோவிலாக இருப்பதால் அதன் மீது பக்தர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு கவனம் அதிகமாக இருக்கும்.  இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் வடக்கு கோபுரத்தில் உள்ள பன்னிரண்டு கலசங்களில் ஒன்றைக் காணவில்லை என்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் சமீபத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வெளிநாட்டில் தந்தை… விவசாயத்தை கையில் எடுத்த 4ஆம் வகுப்பு மாணவன்…!!

விவசாய வேலைகளை ஆர்வமுடன் கற்றுவரும் 4ஆம் வகுப்பு பள்ளி மாணவன், விவசாய கல்லூரியில் சேர்ந்து சிறந்த விவசாயி ஆகப்போவதாக கூறுகிறான். தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே இருக்கும் மானாங்கோரை பகுதியைச் சேர்ந்த முகுந்தன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.. இவருக்கு வரலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியின் மகன் பிரகதீஷ் என்பவன் தஞ்சையிலுள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார்.. கடந்த 7 ஆண்டுகளாக காவேரி ஆற்றில் தண்ணீர் வராததன் காரணமாக பெரும்பாலான […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

165 கிமீ….. ஒற்றை காலில் சைக்கிள் பயணம்….. அரசே உதவி பண்ணுங்க….. பொதுமக்கள் வேண்டுகோள்….!!

தஞ்சை – மதுரை 165 கிலோ மீட்டர் தூரம் மாற்றுத்திறனாளி ஒருவர் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட சம்பவம் காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம் பெருங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி தேவி. இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளன. ராஜா தனது இடது காலை 26 ஆண்டுகளுக்கு முன் விபத்து ஒன்றில் இழந்து விட்டார். தற்போது ஊன்றுகோல் உதவியுடன் தான் அவரால் நடக்க முடியும். இந்நிலையில் தனக்கு விபத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

OTP வரல….. ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்த…. 6 பேரிடம் ரூ2,50,000 நூதன கொள்ளை….!!

தஞ்சையில் ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்த 6 பேரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் இரண்டரை லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் ரயில் நகரில் வசித்து வரும் மரைன் இன்ஜினியராக பணியாற்றி வந்த  ஆயூப் என்பவர் ஊரடங்கு காரணமாக கப்பலில் ஏதும் பணி இல்லாததால், தனது சொந்த மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது வங்கி கணக்கில் இருந்து கிட்டத்தட்ட 4 தவணையாக ரூபாய் 40 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கணக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நேருக்குநேர் மோதிய பைக்… சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி..!!

பூதலூர் அருகே நேருக்கு நேர் 2 பைக்குகள் மோதிக்கொண்டதில், அதில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள புதுப்பட்டி என்ற பகுதியில் சானூரப்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்தவர், மீனாட்சி சுந்தரம் என்பவரது மகன் தனசேகரன் (வயது 39). இவர் புதுப்பட்டியிலுள்ள தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியனாகப் வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பிச் செல்லும்போது தனசேகரனும், செங்கிப்பட்டியிலிருந்து பைக்கில் எதிரே வந்து கொண்டிருந்த திருச்சி மாவட்டம் காட்டூர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குளித்து விட்டு வரும்போது… மணல் குவாரி குழியில் விழுந்து சிறுமி பலி… கொந்தளித்த மக்கள்..!!

கொள்ளிடம் ஆற்றில் குளித்துவிட்டு திரும்பும்போது மணல் குவாரி குழியில் எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்த பள்ளி மாணவி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் மாலினி.. 10 வயதுடைய இவர் திருச்சியிலுள்ள நாகமங்கலத்தில் இருக்கும் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்துவந்தார். கொரோனா ஊரடங்கு விடுமுறை காரணமாக உறவினர் வீடான திருச்செனம்பூண்டி புது பாலத்திலுள்ள தன்னுடைய மாமா வீட்டிற்கு வந்து தங்கி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பக்கத்து வீட்டுடன் சண்டை… இளம்பெண் கட்டையால் அடித்துக்கொலை..!!

பட்டுக்கோட்டை அருகே பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்துள்ள கார்காவயல் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு, சுந்தரி என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியருக்கு சண்முகப்பிரியா (வயது 23), கௌசல்யா(22), சந்தியா (21), கௌசிகா(19) என 4 பெண் குழந்தைகளும், ராஜ வசந்தசேனன்(19) என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் சக்திவேலின் குடும்பத்துக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் குபேந்திரன் வீட்டுக்கும், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

3 மாதங்களாக அரிசி வழங்கவில்லை… ரேஷன் கடையை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்..!!

3 மாத காலமாக அரிசி வழங்கவில்லை எனக் கூறி கிராம மக்கள் 200-க்கும் அதிகமானோர்  நியாயவிலைக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள பரவத்தூர் மேற்கு கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. இங்கு வசித்து வரும் மக்கள் பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகள், தினமும் கூலிவேலைபார்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 3 மாத காலமாக கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருந்துவரும் நிலையில், எந்தவித வருமானமும் இல்லாமல் மிகவும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சொத்துப் பிரச்சனை… வீட்டை எரித்த உறவினர்கள்… போலீசில் புகார்..!!

சொத்துப் பிரச்சனை காரணமாக தன்னுடைய வீட்டை எரித்த உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகாரளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கீழ்வஸ்தா சாவடி அரசுப்பள்ளி அருகில் பிரேமா நாகராஜ் என்பவர் தன்னுடைய தாய் – தந்தையோடு வசித்து வருகின்றார். இந்த நிலையில் சொத்துப் பிரச்சனை காரணமாக பிரேமா நாகராஜிடம், வீட்டைக் காலிசெய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தி அவரது உறவினர்கள் பலமுறை கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்ததாகத் தெரிகிறது. இந்த சூழலில் இன்று அதிகாலை அவரது வீட்டை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

6 கோயில் கலசங்கள்… ரூ 10,000 மதிப்பு… திருடியது யார்?… போலீசார் விசாரணை..!!

திருவையாறு அருகே ரூ 10,000 மதிப்புள்ள 6 கோயில் கலசங்கள் திருடுபோனதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்துள்ள அம்மன்பேட்டை ராஜேந்திரம் மேலப்பேட்டை தெருவில் அமைந்துள்ளது ஜனமுத்தீஸ்வரர் திருக்கோயில்.. இந்தக் கோவிலுக்கு அதே ஊரை சேர்ந்த கணபதி குருக்கள் தினமும் பூஜை செய்துவருகின்றார். இந்நிலையில் நேற்றும் கணபதி குருக்கள் பூஜைகளை முடித்த பின் வீட்டுக்கு சென்றுவிட்டு காலை பூஜைக்கு வந்தார்.. அப்போது கோயிலின் பரிவார தெய்வங்கள் கோபுரத்திலிருந்த 6 செம்பு கலசங்களை காணவில்லை. திருடுபோன […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தஞ்சையிலும் நாளை முழு ஊரடங்கு…. மருந்தகங்கள், பால் கடைகள் இயங்க அனுமதி..!

கடலூர், திருவாரூர், அரியலூரை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மருந்தகங்கள், பால் கடைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டுமே இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இப்ப என்னாச்சுன்னு பாருங்க… ஜோதிகா குறிப்பிட்ட மருத்துவமனையில் 10 விஷபாம்புகள்..!

நடிகை ஜோதிகா விழாவில் குறிப்பிட்ட இராசா மிராசுதார் மருத்துவமனையில் இருந்து கொடிய விஷத்தன்மையுள்ள 5 கட்டுவிரியன் பாம்புகள் உள்பட 10 பாம்புகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர். சமீபத்தில் நடிகை ஜோதிகா, தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,  தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் சரியான பராமரிப்பு இல்லை ரொம்ப மோசமாக உள்ளது.. என் வாயால சொல்ல முடியல என பேசினார். மேலும் கோயிலுக்கு காசு கொடுக்குறீங்க.. உண்டியலில் காசு போடுறீங்க.. […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

“தஞ்சை TO மதுரை” 200 கிமீ…. காதலுனுக்காக நடைபயணம்….. நடவடிக்கை எடுக்குமா காவல்துறை….!!

தஞ்சை to மதுரை வரை 200 கிமீ ஊரடங்கு என்றும் பாராமல் தனது காதலனை பார்க்க நடந்தே சென்று கொண்டிருக்கும் பெண்ணை  காவல்துறையினர் மீட்டு பாதுகாப்பான இடத்தில் சேர்க்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தஞ்சையை சேர்ந்த பிஎஸ்சி பட்டதாரி பெண் ஒருவர் சமீபகாலமாக டிக்டாக் செயலிக்கு அடிமையாகி பல வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். அப்படி வீடியோக்களை வெளியிட்டு வந்த சூழலில் மதுரையைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இவருக்கு டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின் அவர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்… நிறைமாத கர்ப்பிணி வயிற்றில் தீ வைத்த கொடூர மாமியார்!

தஞ்சாவூரில் கர்ப்பிணியின் வயிற்றில்  மாமியார் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பொட்வாச்சாவடி பகுதியில் கர்ப்பிணியின் வயிற்றில்  மாமியார் புஷ்பவல்லி தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பலத்த தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. வயிற்றில் தீ வைத்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது குழந்தையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே மாமியார் புஷ்பவல்லியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஷ்மீரில் இறந்த தமிழக ராணுவ வீரர்… சொந்த மண்ணிற்கு உடல் கொண்டு வரப்படுமா?… கதறி அழும் குடும்பத்தினர்!

காஷ்மீரில் மாரடைப்பால் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை கொண்டுவர அவரது மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 54 வயதான ராமச்சந்திரன். ராமச்சந்திரனுக்கு சீதாகுமாரி என்ற மனைவியும், ரம்யா என்ற மகளும் ராகுல் என்ற மகனும் இருக்கின்றனர். இவர் கடந்த 30 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், காஷ்மீரில் பணியாற்றி வந்த ராமச்சந்திரன் நேற்று முன்தினம் (மார்ச் […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

“கொரோனோ” கலெக்டர் வீட்டில்…. 50 சவரன் கொள்ளை…..!!

தஞ்சை அருகே கொரோனோ நடவடிக்கை மேற்கொள்ள சென்ற கலெக்டர் வீட்டிலையே கொள்ளையர்கள் கை வரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனோ வைரசுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் உரிய நேரத்தில் மேற்கொள்ளப் படுகிறதா? என்பதை கண்காணிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் துரிதப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் கொரோனோ நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதை அறிந்த […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

“கொரோனோ” 5 மாத குழந்தைக்கு அறிகுறி….. தஞ்சையில் பரபரப்பு…..!!

தஞ்சையில் 5 மாத குழந்தைக்கு கொரோனோ நோய் தொற்று கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனோ வைரஸ் நோய் தொற்று இந்தியாவிலும் தீவிரம் காட்டி வரும் சூழ்நிலையில், அதனை ஆரம்ப காலகட்டத்திலேயே தடுத்து நிறுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் நோயின் தாக்கம் சற்று வீரியத்துடன் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இதனுடைய தாக்கம் சற்றுக் குறைவாக காணப்பட்டாலும், ஆங்காங்கே கொரோனோ அறிகுறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

163 வது நாள்…… காலை உணவு முற்றிலும் இலவசம்…… அசத்தும் விஜய் ரசிகர்கள்…..!!

தஞ்சாவூரில் விஜய் ரசிகர்களால் தொடங்கப்பட்ட விலையில்லா விருந்தகம் 163 வது நாளை கடந்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தஞ்சாவூர், மேலூர் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் விஜய் ரசிகர்கள் ஏழைகளுக்காக விலையில்லா விருந்தகம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன்படி ஏழைகளுக்கு காலை உணவு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இந்த உணவு மிகவும் தரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். செப்டம்பர் மாதம்  விஜய் ரசிகர்களால் தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்பொழுது 163 வது நாளாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ரூ12,000 கொடு…. நல்ல லாபம் தாரேன்….. மோசடி….. மேலும் ஒருவர் கைது…..!!

தஞ்சாவூர் அருகே எல்ஃபின் e-com பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மோசடி செய்தது தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில்,  அதன் மற்றொரு ஒருங்கிணைப்பாளரும் நேற்று கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்ட மக்களின் வாட்ஸ்அப் நம்பர்களுக்கு விளம்பர செய்தி ஒன்று வேகமாக பரவி வந்துள்ளது. அதில், திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு எல்ஃபின் e-com பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனியின் அலுவலக கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற இருப்பதாகவும், அதில் கலந்து கொள்வதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும் என்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நாட்டியக் கலைஞர்கள் 2020 பரதம் ஆடி சாதனை ….!!

2020 ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் 2020 நாட்டியக் கலைஞர்கள் பரதம் ஆடி சாதனை படைத்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி ஆலயத்தில் மகளிர் விழிப்புணர்வுக்காக, 2020 மாணவிகள் பரதம் ஆடி சாதனை படைத்தனர். மகா சிவராத்திரி விழிப்புணர்வு குறித்த ‘குரு சமர்ப்பணம்’ என்ற பெயரில் நாட்டியாஞ்சலி பெருவிழா நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், 2020 ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் 2020 நாட்டியக் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெரிய LIST….. இதெல்லாம் நீங்க தான் பண்ணி தரணும்….. காந்தி சிலையிடம்….. விவசாயிகள் மனு….!!

தஞ்சாவூர் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பாக காந்தி சிலையிடம் மனு அளிக்கும்  போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சுற்றியுள்ள விவசாயிகள் தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறு நாள்கள் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், 55 வயதை கடந்த வேளாண் தொழில் சார்ந்தவர்களுக்கும், விவசாயிகளுக்கும் குறைந்தபட்சம் ரூபாய் 5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும், பயிர் கடன் ரத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

லண்டனில் தமிழன் சிலை…… 100% உறுதி….. மீட்டு கொண்டு வருமா தமிழக அரசு….? எதிர்பார்ப்பில் தமிழர்கள்…..!!

தஞ்சை சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான திருமங்கை ஆழ்வார் சிலை லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சை  சுந்தரபெருமாள் கிராமத்தில் உள்ள சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான திருமங்கை ஆழ்வார் உலோகச் சிலை 1957 முதல் 1967 காலகட்டத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.   இதனை விசாரிக்க புலன்விசாரணை அதிகாரியாக சந்திரசேகரன் என்பவர் நியமிக்கப்பட்டு, சிலை திருட்டு தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் லண்டன் அருங்காட்சியகம் ஒன்றில் இந்த சிலை ஒன்றின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நான் விதைச்ச நிலத்தை…… என்கிட்ட கேட்காம வித்துட்டா….. நீ அறுவடை பண்ணுவியா….. ட்ரைவர் கொலை…. ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது….!!

கும்பகோணம் அறுவடை இயந்திர வாகனத்தின் டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை அடுத்துள்ள விட்டள் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா. இவரது கணவர் மனோகரன். விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் அவரது உறவினரான ஒருவரது நிலத்தை நீண்டகாலமாக பராமரித்து வருகிறார். இந்த வருடம் அதில் நெல் பயிரிட்டு இருந்தார். இந்நிலையில் இவர் பராமரித்து வந்த நிலத்தை அவரது உறவினரிடம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கூலிப்படை” கொலை…. கொள்ளை…. வழிப்பறி…. அடிதடி… 4 மாவட்டத்தை சேர்ந்த….. 5 பேர் கைது….!!

தஞ்சாவூர் அருகே கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 4 மாவட்டங்களைச் சேர்ந்த கூலிப்படையினர் தனிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் ராஜா இவரது வீட்டில் கூலி படையினருக்கு இவர் அடைக்கலம் கொடுத்துள்ளதாக வந்த தகவலின் பேரில் கூலிப்படைக்காவே அமைக்கப்பட்ட தனிப்படை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கி பாண்டி திருச்சியை சேர்ந்த ராஜா திண்டுக்கல்லைச் சேர்ந்த விக்னேஷ் அரியலூரை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 6 நாள்… 10 ஆம் வகுப்பு மாணவியை சீரழித்த கல்லூரி மாணவன்…!!

பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த கல்லூரி மாணவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கும்பகோணம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருபவர் தீக்‌ஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை கடந்த ஆறு நாட்களாகக் காணவில்லை என்று, அவரது தாய் லதா திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் கவிதாவிடம் புகார் அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து ஆய்வாளர் கவிதா, பந்தநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சுகுணா ஆகியோர் கடந்த ஆறு நாட்களாக பத்துக்கும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணிடம் நகை பறிப்பு – போலீஸ் வலைவீச்சு

வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணின் நகையை பறித்துக்கொண்டு போன மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை சேர்ந்தவர் சத்யா. சத்யாவின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் செங்கோட்டையில் இருந்து தஞ்சாவூரில் நடைபெறும் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய மொபட்டில் சென்றுள்ளார் சத்யா. அச்சமயம் வி கே நகர் பகுதியில் சத்யா மொபட்டில் சென்று கொண்டிருக்கையில் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் சத்யாவின் கழுத்தில் கிடந்த […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

விஜய் கிறிஸ்துவ மதத்தை பரப்புகிறார் – அர்ஜுன் சம்பத்

விஜய் தனது ரசிகர்களின் மூலம் கிறிஸ்துவ மதத்தை பரப்புகிறார் என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார் தஞ்சை பெரிய கோவிலிற்க்கு பிரார்த்தனை செய்ய வந்திருந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “விஜய்யும் ரஜினியையும் ஒப்பிட்டுப் பேசுவது மிகவும் தவறான விஷயம். வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த சமயம் ரஜினியின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது சில ஆவணங்கள் கிடைத்தது வருமானவரித்துறையினருக்கு. பின்னர் வருமான வரித்துறையினரே  ரஜினி அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

காதல் மனைவியுடன் சண்டை….. ஆத்திரம்….. கத்தரிக்கோலால் குத்திக்கொலை…… கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

தஞ்சாவூர் அருகே காதல் மனைவியை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த கணவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியையடுத்த ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்பவரை 18 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சென்னையில் இளையராஜா வேலைபார்த்து வர சங்கீதா தனது தாயார் வீட்டில் தங்கி மகன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்து 3 நாளில் பெண் தற்கொலை

திருமணமான மூன்றே நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஆற்காடு சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் திவ்யா ஆற்காட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த காவல் அதிகாரி ராகவேந்திரன் என்பவருக்கு கடந்த 7ஆம் தேதி திவ்யாவை திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து நேற்று கணவருடன் தாய் வீட்டிற்கு வந்த திவ்யா எல்லோரிடமும் ஆனந்தமாக பேசிவிட்டு ஓய்வு எடுக்கப் போவதாக கூறி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மனைவியின் நடத்தையில் சந்தேகம்….. கொலை செய்த கணவன்….!!

மனைவி நடத்தையில் சந்தேகம் கொண்டு கொலை செய்த கணவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி சங்கீதா இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சங்கீதா வீட்டிலேயே தையல் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இளையராஜா வெளிநாடு சென்று வேலை செய்கிறேன் என்று கூறி அடிக்கடி வெளிநாடு சென்று வேலை செய்யாமல் பணத்தை விரயம் செய்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே சண்டைகள் பல ஏற்பட்டுள்ளது. கடந்த […]

Categories
ஆன்மிகம் இந்து தஞ்சாவூர் மாநில செய்திகள்

ராஜகோபுரத்தில் புனித நீர்….. காட்சி கொடுத்த கிருஷ்ண பகவான்….. தஞ்சையில் பக்தர்கள் பரவசம்…!!

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவில்  ராஜகோபுரத்தில் புனிதநீர் ஊற்றும் சமயத்தில் சரியாக கருடன் கோபுரத்தை சுற்றி வட்டம் அடித்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று தஞ்சை இராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவிலில் குடமுழுக்கு விழாவானது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சிவபெருமானை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் குடமுழுக்கு சிறப்பம்சமாக கோபுரங்களில் உள்ள கலசத்தில் புனிதநீர்  ஊற்றப்படும். அந்தவகையில், சரியாக ராஜகோபுரத்தின் கலசத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கட்டியவன் தமிழன்..! வழிபாடுபவன் தமிழன்..!. சர்சைக்குரிய சுவரொட்டியால் கைது …!!

 தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரி சுவரொட்டிகள் ஒட்டியதாகக் கைது செய்யப்பட்ட இருவரையும் வருகிற 16ஆம் தேதி வரை காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் மட்டுமே நடத்தக் கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், தஞ்சை நகரம் முழுவதும் மக்கள் அதிகாரம் சார்பில் இக்கோரிக்கையை வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அதிகார அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளான தேவன், பாலாஜி ஆகியோரைக் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

படிக்க ஆசையா இருக்கு… ஆனா முடியல… மருத்துவ உதவி வேண்டி காத்திருக்கும் பள்ளி சிறுவன்..!!

காயமடைந்து பார்வை பறிபோன நிலையில் மருத்துவ உதவி வேண்டி பள்ளி சிறுவன் ஒருவர் உதவி கோரியுள்ளார். தஞ்சை மாவட்டம் ஊமத்தகாடு ஊராட்சிக்குள்பட்ட கிராமமான பெத்தனாட்சி வயல் பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி. அன்றாடம் கூலி வேலை பார்த்து, அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்திவருகிறார். இவருடைய மகன் சின்ராசு (12), அதே பகுதியில் ஏழாம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் சின்ராசு விளையாண்டு கொண்டிருந்தபொழுது கீழே விழுந்தார். அப்போது சிறுவனுக்கு கண் பார்வை […]

Categories
கதைகள் தஞ்சாவூர் பல்சுவை மாநில செய்திகள்

அப்பவே புரட்சி… கோவில் கருவறைக்குள் பெண்கள்…. குறையில்லா ஆட்சி கண்ட தமிழர்கள்….!!

ராஜராஜ சோழன் காலத்தில் பெண்களை கருவறைக்குள் பணி செய்வதற்காக அனுப்பி அதற்கான ஓவியங்கள் குறித்தும் அதற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ராஜராஜன் கட்டிய பெரிய கோவிலில் அக்காலகட்டத்தில் 1200 பேர் வேலை செய்திருக்கிறார்கள். இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் பிற சமூகத்தவர்கள் அனைவருமே இந்த குழுவில் பணியாற்றி இருக்கிறார்கள். கோவிலில் இருக்கக்கூடிய கருவரைக்கு அவர்கள் எப்போதுமே போகலாம். குறிப்பாக தளிச்சேரிப் பெண்கள் கோவில் கருவறைக்குள் சென்று வழிபடக்கூடிய உரிமையைப் பெற்றிருந்தனர். மேலும் அவர்கள் கோவிலில் பணி புரிந்ததற்கான  ஆதாரங்களும் […]

Categories
கதைகள் தஞ்சாவூர் பல்சுவை மாநில செய்திகள்

இம்பூட்டு நுணுக்கமா….? மெர்சல் கலைஞர்கள்….. வியப்பூட்டும் உண்மை கதை….!!

தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்களை பார்க்கும்போது அக்காலகட்டத்தில் நாம் பிறந்திருக்க கூடாதா என்ற அளவிற்கு நம்மை வியப்பில் பால் தெரிகிறது. ராஜராஜன் கட்டிய பெரிய கோவிலில் பல சிவாலயங்கள் உள்ளன. முதலில் நுழையும் பொழுது கேரளாந்தன் திருவாசகம் என்ற ஒன்று உள்ளது. அதனை தொடர்ந்து  ராஜராஜன் திருவாயில் வரும். இந்த திருவாயில் திருசிற்றம் மாலையுடன் அமைந்துள்ளது. மேலும் இதில் 24 சிற்றாலயங்கள் உள்ளன. இந்த இருபத்தி நான்கு சிற்றாலயங்களிலும்  உள்ள கடவுள்களை திசை கடவுள் என்று […]

Categories
கதைகள் தஞ்சாவூர் பல்சுவை மாநில செய்திகள்

சீனா…. ஐரோப்பியா…. வெளிநாடுகளுடன் நட்பு…. அப்பவே அப்புடி… மோடியை மிஞ்சிய ராஜராஜ சோழன்….!!

தஞ்சை பெரிய கோவிலுக்கு ஐரோப்பிய சினிமா உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் வந்து வழிபட்டுச் சென்று அதற்கான சான்றுகளாக சிற்பங்கள் விளங்குகின்றன. ராஜராஜன் கட்டிய பெரிய கோவிலின் வடக்குப் பக்கம் சண்டிகேஸ்வரர் ஆலயம் அருகில் இரண்டாவது சிலையாக ஐரோப்பிய சிலை ஒன்று இருக்கும். அதனை பார்க்கும் போது பிற்காலத்தில் செதுக்கிய சிற்பம் என்று நிறைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அது தவறு. அது ராஜராஜன் காலகட்டத்தில் கடல் கடந்து சென்று, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தனது  படைகளை அனுப்பி சீனர்களுடனும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழ் , சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த அனுமதி …!!

தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கூடிய வழக்கின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திருமுருகன், மணியரசன், செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவில் தமிழில் தேவாரம் திருவாசகம் ஆகியவை உச்சரித்து குடமுழுக்கு நடத்த வேண்டுமென்று வழக்கு தொடர்ந்தனர்.மேலும் மனுதாரர்கள்  சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில்  குடமுழுக்கு விழாவிற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதை ஏற்க முடியாது  என்றும் சொல்லப்பட்டது. இதனையடுத்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில் குடமுழுக்கு நடைபெறும் […]

Categories
மாநில செய்திகள்

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு இன்று தீர்ப்பு ….!!

தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கூடிய வழக்குகளில் இன்று  தீர்ப்பு வழங்கப்பட இருக்கின்றது. திருமுருகன், மணியரசன், செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவில் தமிழில் தேவாரம் திருவாசகம் ஆகியவை உச்சரித்து குடமுழுக்கு நடத்த வேண்டுமென்று வழக்கு தொடர்ந்தனர்.மேலும் மனுதாரர்கள்  சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில்  குடமுழுக்கு விழாவிற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதை ஏற்க முடியாது  என்றும் சொல்லப்பட்டது. இதனையடுத்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில் குடமுழுக்கு […]

Categories
மாநில செய்திகள்

Breaking : தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு நாளை தீர்ப்பு ….!!

தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கூடிய வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்கப்பட இருக்கின்றது. திருமுருகன், மணியரசன், செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவில் தமிழில் தேவாரம் திருவாசகம் ஆகியவை உச்சரித்து குடமுழுக்கு நடத்த வேண்டுமென்று வழக்கு தொடர்ந்தனர்.மேலும் மனுதாரர்கள்  சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில்  குடமுழுக்கு விழாவிற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதை ஏற்க முடியாது  என்றும் சொல்லப்பட்டது. இதனையடுத்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில் குடமுழுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் தான் வேண்டும்…. ”ஒய்யப்போறதில்லை”…. பெ. மணியரசன் உறுதி …!!

தமிழ் மன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் தெரிவித்துள்ளார். தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்த வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தார். அதன் பின்னர்  அவர் அளித்த பேட்டியில், ‘தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் பிப்ரவரி 5ஆம் தேதி […]

Categories
ஆன்மிகம் இந்து தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சை கோவிலில் விழா நடக்குமா? நடந்தால் குடமுழுக்காக நடக்குமா இல்லை கும்பாபிஷேகமாக நடக்குமா?

பிப்ரவரி ஐந்தாம் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது தஞ்சை பெரிய கோவிலும் தயாராகி விட்டது ஆனால் கோவிலில் தமிழ் மொழியில் திருகுட நன்னீராட்டு நடக்குமா இல்லை சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுமா என்ற கேள்விக்கான பதில் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கிறது. பெரும்பாலான இந்து கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் கடந்த 1996ம் ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற வில்லை. கும்பாபிஷேகம் நடத்த கோரி கடந்த 2008ம் ஆண்டு முதலே பக்தர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டம்… திமுகவுக்கு அனுமதியளித்த போலீசார்..!!

தி.மு.க சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திருவாரூர் மற்றும் தஞ்சையில் போராட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதியளித்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் நீர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்ட பாலைவனமாகும். எனவே இத்திட்டத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி […]

Categories
ஆன்மிகம் இந்து தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ரூ 9,00,000 மதிப்பு… பர்மாவில் இருந்து தஞ்சைக்கு வந்த கொடிமரம்..!!

தஞ்சை பெரிய கோவிலில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி  பர்மாவில் இருந்து கொடிமரம் வந்துள்ளது. 23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு தற்போது தஞ்சை பெரிய கோவிலில் பழைய கொடிமரம் அகற்றப்பட்டு புதிதாக கொடிமரம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கொடி மரமானது பர்மாவிலிருந்து கொண்டுவரப் பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ஒன்பது லட்சத்துக்கும் அதிகமாக  இருக்கும் என […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

வெற்றி…. வெற்றி….. தமிழில் தான் குடமுழுக்கு….. இந்துசமய அறநிலையத்துறை தகவல்….!!

தஞ்சை பெரிய கோவிலில் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற இருக்கும் குடமுழுக்கை தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்த இந்து சமய அறநிலைத்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெரிய கோவிலில் நடைபெறும் குடமுழுக்கை தமிழில் திருமுறைகளை ஓதி நடத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்ததோடு மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும்  வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளில் […]

Categories
அரசியல் தஞ்சாவூர் மாநில செய்திகள்

“தஞ்சை குடமுழுக்கு” தமிழர்கள் கோரிக்கை நியாயமானது தான்…… ராமதாஸ் ட்விட்…!!

தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.  தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக பாமக கட்சி தலைவர் ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானதே ஆகமவிதிகள் இந்த கோரிக்கைக்கு எதிராக இல்லை எனவே தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு […]

Categories
கட்டுரைகள் கதைகள் தஞ்சாவூர் பல்சுவை மாநில செய்திகள்

“காலத்தால் அழியாத கோவில்” எப்பேர்ப்பட்ட நிலநடுக்கம் வந்தாலும்…… ஒரு கல்லு கூட நகராது…… மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை கதை…!!

1010 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு கட்டுமானம் இன்றளவும் அதன் பொலிவு குறையாமல் நிலைத்து நின்று புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது என்றால் அது தஞ்சை பெரிய கோவில் தான் இக்கோவிலில் குறிப்பிடத்தகுந்த சிறப்பம்சங்கள் சிலவற்றை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது தஞ்சை பெரிய கோவில். காவிரி பாயும் சமதளப் பகுதியில் இது போன்றதொரு கோவில் கட்டுவதற்கான கற்களும் பெரிய பாறைகளை இல்லாத இடத்தில் அரியவகை கற்களைக் கொண்டுவந்து உலகம் வியக்கும் […]

Categories
ஆன்மிகம் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சையில் குடமுழுக்ககில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க சிறப்பு யாகம்…

தஞ்சை பெரிய கோவிலில் வரும் 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தஞ்சை பெரிய கோவில் உலகப் புகழ்பெற்ற பெரிய கோவில் இந்த பெரிய கோவிலில் பிப்ரவரி ஐந்தாம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நேரத்தில்குடமுழுக்கு போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சிறப்பு யாகம் நடைபெற்றுவருகின்றது.  அஷ்டபந்தனம் என்று சொல்லக்கூடிய 252 சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் யாகத்தில் ஊழியர்கள் ஈடுபட்டு […]

Categories

Tech |