கொலை வழக்கில் சிறையில் இருந்த குற்றவாளிக்கு சிறுநீரக நோய் ஏற்பட்டதால் தமிழக அரசு பரோலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் பேரறிவாளன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 28 வருடங்களாக சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் சிறுநீரக நோய் பாதிப்பால் பல மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டும் தீராத காரணத்தினால் அவரின் தாயார் தமிழக அரசிடம் பரோல் வழங்குமாறு மனு அளித்துள்ளார். […]
