தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தடம்புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் மேல்பாக்கம் வழியாக ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவிற்கு சரக்கு ரயில் புறப்பட்டு சித்தேரி ரயில் நிலைய இணைப்பில் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ரயிலின் 14-வது பெட்டியின் சக்கரம் தண்டவாளத்திலிருந்து கிழே இறங்கியுள்ளது. இதனை அறிந்த ரயில் ஓட்டுனர் உடனே நிறுத்தி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் பார்த்ததில் […]
